டெல்லியில் ரெட் அலர்ட்..அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!

தொடர் மழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதையடுத்து டெல்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் கனமழை வெளுத்து வாங்கியது.

 

மேலும் மோசமான வானிலை காரணமாக 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் அதிகாரிகள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா தெரிவித்துள்ளார். இதனிடையே டெல்லியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.