கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு சென்ற ஆம்புலன்ஸ்..நடுவழியில் சிக்கல்..!
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலை கிராமத்தில் இருந்து கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிக்கொண்டு செல்வதற்காக திம்பம் தரமணி சாலையில் 108 ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த பொழுது பலத்த காற்று வீசியதால் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் அடர்ந்த வனப்பகுதியில் தவிக்கும் நிலை ஏற்பட்டது. உடனடியாக மரக்கிளையை வெட்டியா பின்னர் ஆம்புலன்ஸ் மீண்டும் புறப்பட்டு சென்று கர்ப்பிணியை ஆசனூர் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





