நடுரோட்டில் விழுந்த சிக்னல் கம்பம்..!
அரியலூர் மாவட்ட பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் பேருந்து நிலையம் வரை கீழபழைய நகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் போக்குவரத்து சிக்னல் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கம்பம் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்நேரம் சிக்னல் கம்பம் அருகே யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





