--- --:--:-- --

குரூப் 2 தேர்வுக்கு அப்ளை பண்ண இன்றே கடைசி நாள்..!

1

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 மற்றும் குரூப் -2 ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 507 குரூப்-2 பணியிடங்கள் மற்றும் உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட ஆயிரத்து 820 குரூப்-2ஏ பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் 20-ஆம் தேதி வெளியிட்டது.

 

ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய வரும் 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும் என்றும், அதன்பிறகு, எந்த மாற்றமும் செய்ய அனுமதிக்கப்படாது எனவும் டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon