--- --:--:-- --

3வது பெண் குழந்தை பிறந்ததால் கடுப்பான தந்தை..!

9

வியாசர் பாடியில் பிறந்து 9 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தந்தையே கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாசர் பாடி சுந்தரம் நான்காவது தெருவில் கூலித்தொழிலாளி ராஜ்குமார் என்பவர் தனது மனைவி விஜயலட்சுமி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

 

நிறை மாத கர்ப்பிணியாக இருந்து வந்த விஜயலட்சுமிக்கு கடந்த நான்காம் தேதி மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தாய் மற்றும் குழந்தை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் கடந்த 7ம் தேதி வயிற்றில் ஆயுதத்துடன் குழந்தையை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர்.

 

குழந்தை பாதுகாப்பு வைத்திருக்க தகவல் தெரிவித்துவிட்டு காவல்துறைக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த பத்தாம் தேதி சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததை தொடர்ந்து அது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

இதில் குழந்தையின் வயிற்றில் கூர்மையான ஆயுதங்களை வைத்து குத்தியது தெரியவந்துள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மூன்றாவது முறையும் பெண் குழந்தை பிறந்ததால் தந்தையை குழந்தையை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த தெரியவந்துள்ளது.

 

தொடர்ந்து போலீசார் ராஜ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon