பைக் மீது லாரி மோதி விபத்து..!
இருசக்கர வாகனம் மீது மணல் லாரி மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மலைகோவில் கிராமத்தை சேர்ந்த பாரதி, கோகுல கண்ணன், யோகேஷ் என்ற மூன்று பேரும் வெவ்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வந்த நிலையில் புதிதாக வாங்கப்பட்ட விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தில் மூன்று பெரும் பண்ருட்டியில் இருந்து ஆலத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்பொழுது எதிரே மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்படுத்தி விட்டது. தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





