--- --:--:-- --

டிடிஎப் செய்த பிராங்க் வீடியோ..போலீசில் புகார்..!

5

மத உணர்வுகளை துன்புறுத்தியதாக யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது திருப்பதியில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திருப்பதி கோயிலுக்கு வந்திருந்த டிடிஎப் வாசன் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருந்த பகுதியில் கேட்டை திறந்து விடுவது போன்று பிராங் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

 

கோயிலில் இவ்வாறு வீடியோ எடுத்ததற்கு பல்வேறு தரப்பினரிடம் கண்டனங்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் தரிசன வரிசைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தேவஸ்தான விஜிலன்ஸ் துறையினர் திருமலை காவல் நிலையத்தில் வாசன் மீது புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் டிடிஎஃப் வாசன் மீது மத உணர்வுகள் மத நம்பிக்கைகளை புண்படுத்துதல் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon