--- --:--:-- --

இரும்பு தகடு விழுந்து சென்னை ஐடி பெண் பலி..!

7

இரும்பு தகடு சரிந்து விழுந்ததில் பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரேணுகா தரமணியில் உள்ள பிரபலமான தனியார் மென்பொருள் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து விட்டு நிறுவனத்தில் இருந்து வெளியே வந்து இருக்கிறார்.

 

அப்பொழுது பெய்த மழை மற்றும் காற்றின் காரணமாக கட்டுமான பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தகடு சரிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon