சென்னையில் கன மழையால் சாலையில் நிலை தடுமாறி விழுந்த இளம் பெண் லாரி மோதி உயிரிழந்தார். சென்னை டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வெங்கடேசன் தனது சகோதரி இருசக்கர வாகனத்தில் சென்னை திருமங்கலம் 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தார்.
கனமழை பெய்ததால் பைக் நிலை தடுமாறு இருவரும் கீழே விழுந்தனர். அப்பொழுது பின்னால் வேகமாக வந்தால் அவர் மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். வெங்கடேசன் படுகாயம் அடைந்தார்.
போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹேமமாளினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியுடன் தப்பிய நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சாலையில் இருந்த பள்ளத்தையும் மழைநீர் சூழ்ந்து ஓடியதால் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இரவோடு இரவாக மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை மூடியதாகவும் கூறப்படுகிறது.