--- --:--:-- --

ரவுடி துரைசாமி என்கவுண்டரில் சுட்டு கொலை..!

1

50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி துரைசாமி, என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். கட்டப்பஞ்சாயத்து, கொலைகள், ஆட்கடத்தல் என மாபெரும் க்ரைம் சாம்ஜியத்தை உருவாக்கி உள்ளூர் தொழிலதிபர்களையும், முக்கிய புள்ளிகளையும் அச்சுறுத்தி பணம் பறித்து வந்தவர், பிரபல ரவுடி துரைசாமி. தன்னை எதிர்க்கும் யாராக இருந்தாலும், கூட்டாளிகளை ஏவி ஸ்கெட்ச் போட்டு தீர்த்துக்கட்டும் ரவுடி துரை, தற்போது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் .

 

திருச்சி மாவட்டம் வண்ணாரப்பேட்டை எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி துரை என்கிற துரைசாமி. 40 வயதான இவர் மீது 5 கொலைகள், மிரட்டி பணம் பறித்தல், கட்டப்பஞ்சாயத்து, திருட்டு உள்ளிட்ட 65 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்த நிலையில் அவர் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தனது ஆட்களை அனுப்பி மிரட்டி பணம் பறித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 

இதற்கு மேல் அவர் அடங்கப் போவதில்லை என்பதை உணர்ந்த போலீசார் ரவுடி துரைசாமிக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளனர்.ஆனால் அவர் தப்பியோடிக் கடந்த சில மாதங்களாகத் தலைமறைவாக இருந்துள்ளார். தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவித்து தனிப்படை அமைத்த போலீசார், ரவுடி துரையை பிடிக்க திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.அப்போதுதான், ரவுடி துரை பதுங்கி இருக்கும் இடம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள தைலமர காட்டு பகுதியில், ரவுடி துரை மறைந்திருப்பதை உறுதி செய்தனர். போலீசாருக்கு தண்ணீர் காட்டி வந்தவரை இந்தமுறை விட்டுவிடக்கூடாது! என ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன் மற்றும் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் ஆகியோர் களத்தில் இறங்கினர்.

 

நேற்று மாலை 4.30 மணியளவில் திருவரங்குளம் தைலமர காட்டு பகுதியில், அதிரடியாக நுழைந்து தேடியதில் அங்கு தனது கூட்டாளிகளுடம் மது அருந்தி கொண்டிருந்த ரவுடி துரை, காவலர்களின் கண்ணில் சிக்கியுள்ளார். சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்ற போது துரை தனது கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியால், காவல் ஆய்வாளர் முத்தையனை வெட்டியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon