சிறுமிகளை ஆபாச படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட இளைஞர்..!
சிறுமிகளை ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட வழக்கில் இளைஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவர் மெட்டல் ஜேம்ஸ் ராஜா.
இவர் நண்பருடன் சேர்ந்து சிறார்கள் ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு வருவதாக இன்டர்போல் மூலம் மத்திய அரசுக்கு தகவல் வந்தது. அதை தொடர்ந்து விவகாரம் குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
18 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளை ஜேம்ஸ் ராஜா பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ பதிவு செய்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





