குற்றால அருவியில் குளித்த கல்யாண பெண்ணின் மோதிரம் காணாமல் போனதால் அதிர்ச்சி..!
தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் குடும்பத்துடன் குளிக்க வந்த சுற்றுலா பயணிகளில் பெண் ஒருவர் தனது கையில் அணிந்திருந்த சுமார் ஒரு பவுன் தங்க மோதிரத்தை தவறவிட்டார்.
திருமணம் மோதிரம் என்பதால் செய்வதறியாது தவித்த அந்த பெண் குற்றாலம் பேரூராட்சி தலைவர் கணேஷ் தாமோதரனிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக அவர் பேரூராட்சி பணியாளர்களை சிறிய தடாகத்தில் இரவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட வைத்தார். அவருடன் போலீசார் இணைந்து சுமார் அரை மணி நேர தேடுதலுக்கு பின் மோதிரத்தை கண்டுபிடித்து தொலைத்த பெண்ணிடம் ஒப்படைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





