உலக கோப்பையை தொட மறுத்த பிரதமர் மோடி..!

T20 உலக கோப்பையை கையில் ஏந்த மறுத்த கேப்டன் ரோஹித் மற்றும் ராகுல் டிராவிட்டின் கைகளை பிடித்துக் கொண்டு பிரதமர் மோடி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வென்று வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் வெற்றி கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்கள் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 

அப்பொழுது வீரர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரதமர் மோடி உலக கோப்பையை தொடாமல் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பெயர்ச்சியாளர் ராகுல் டிராவிட் காயை பிடித்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.