--- --:--:-- --

வாயில் நுரை தள்ளி தொழிலாளி தற்கொலை..!

5

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தீப்பெட்டி ஆலையில் வேலை செய்த இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக கிராம பஞ்சாயத்து தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

 

தன்னுடைய தீப்பெட்டி ஆலையில் வேலை செய்த அழகுடன் நான்கு பேர் தீக்குச்சி மூட்டைகளை திருடிவிட்டதாக பார்த்தசாரதியையும் அவரை சார்ந்தவர்களும் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. தன்னிடம் வாங்கிய முன்பணம் உட்பட ஒன்றை லட்சம் ரூபாய் பணத்தை தருமாறு பார்த்தசாரதி வற்புறுத்தியதாக அழகுராஜா பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

அழகுராஜா பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் பார்த்தசாரதி உள்ளிட்ட மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon