--- --:--:-- --

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சரண்யாவுக்கு என்னாச்சு..!

11

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் தற்போது தங்கமயில் என்ற முக்கிய ரோலில் நடித்து வருகிறார் சரண்யா துராடி. அவரது ரோலுக்கு அதிக முக்கியத்துவமும் தரப்பட்டு வருகிறது.

 

முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் நடிகையான சரண்யா நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து போன்ற தொடர்களில் நடித்து இருக்கிறார்.

 

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவரது கதாபாத்திரம் சற்று நெகட்டிவாக காட்டப்பட்டு வருவதால் அவர் தான் வில்லியாக மாற போகிறாரா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்திருக்கிறது. நடிகை சரண்யா துராடி தற்போது காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சர்ஜரி செய்துகொண்டிருக்கிறார்.

 

மருத்துவமனையில் எடுத்த போட்டோக்களை பதிவிட்டு தான் வலியை தாண்டிக்கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார். தற்போது வீட்டில் ஓய்வில் இருப்பதால் சரண்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து பிரேக் எடுத்துக்கொள்வாரா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon