--- --:--:-- --

வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து.. துரிதமாக செயல்பட்ட ஓட்டுனர்..!

5

வேலூர் மாவட்டத்தில் வைக்கோல் ஏற்றி வந்த வேனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சேதம் ஆகின. திருவள்ளூர் மாவட்டம் பரப்பாக்கத்தில் இருந்து அருள் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் லோடு ஏற்றி விற்பனைக்காக குடியாத்தம் பகுதிக்கு ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டது.

 

நெல்லூர் பேட்டையில் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது மின் கம்பிகளில் உரசி தீப்பற்றியதாக கூறப்படுகிறது. துரிதமாக செயல்பட்ட ஓட்டுனர் போக்குவரத்து நிறைந்த பகுதிகளிலிருந்து உடனடியாக ஓட்டி சென்று நெல்லூர் பேட்டை ஏரிக்கரை அருகில் நிறுத்தியுள்ளார்.

 

இது குறித்து தகவல் அறிந்த நிகழ்வு இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போரடித் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon