பேருந்தை முந்தி செல்ல முயன்ற கார்.. தலை குப்புற கவிழ்ந்து விபத்து..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பேருந்து முந்த முயன்ற கார் பேருந்தின் மீது மோதி விபத்திற்கு உள்ளானதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோவையை நோக்கி தனியார் பேருந்து சென்றுள்ளது.
அப்பொழுது காரில் வந்த ஸ்ரீவர்த்தினி என்பவர் பேருந்தை முந்த முயன்றார். பேருந்தின் பக்கவாட்டில் மோதிய கார் பேருந்தில் முன்னாள் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் காரில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





