பாதாள சாக்கடை குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்படும் சாலைகள்..வாகன ஓட்டிகள் அவதி..!
திருச்சி தில்லைநகரில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடைபெறுவதால் சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
திருச்சி தில்லைநகர் பிரதான சாலை தொடங்கி தில்லைநகர் ஒன்றாவது குறுக்கு தெரு முதல் 11 வது குறுக்கு தெரு வரையிலான பகுதியில் பாதாள சாக்கடை குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கான சாலைகள் தோண்டப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் முக்கிய சாலைகளில் ஒன்றாக விளங்கக்கூடிய தில்லைநகர் சாலையில் இதுபோன்ற பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலை முழுவதும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கின்றன. ஏற்கனவே சாலையின் இடதுபுறம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்ற சாலை செப்பனிடப்பட்ட நிலையில் மீண்டும் வலது புறம் தோண்டப்படுவதால் எப்போதுதான் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





