திருவாடானையில் ஶ்ரீ மகாலிங்க மூர்த்தி ஆணி உற்சவ விழா..!
திருவாடானையில் ஶ்ரீ மகாலிங்க மூர்த்தி ஆணி உற்சவ விழாவை முன்னிட்டு பால்குடம் காவடி எடுத்து பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்ன கீரமங்கலத்தில் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி ஆலயம் உள்ளது இந்த ஆலயத்திற்கு ஆனி மாத திருவிழா கடந்த 16ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் துவங்கி விழா நடைபெற்று வந்த நிலையில் ஒவ்வொரு நாளும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து 23ஆம் தேதி கோவில் முன்பு திரு விளக்கு பூஜை நடைபெற்றது. இன்று காலை பக்தர்கள் விரதம் இருந்த பக்தர்கள் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
முன்னதாக மயில் காவடி , வேல் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வீதி விழா வந்து பூக்குளியில் இறங்கி நேற்று கடன் செலுத்தினார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.நாளை காலை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற உள்ளது
📱 Share on WhatsApp 𝕏 Share on X




