--- --:--:-- --

தாயை தொலைத்து சாலையில் அழுது கொண்டிருந்த சிறுவன்..!

3

குடியாத்தம் காவல் நிலையம் முன்பு தாயை காணவில்லை என அழுது கொண்டிருந்த பள்ளி சிறுவனை போலீசார் அழைத்துச் சென்று அவரது பாட்டியிடம் ஒப்படைத்தனர்.

 

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ரமேஷ் பாபு – உண்ணாமலை தம்பதிக்கு இடையே இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்பொழுது வீட்டை விட்டு வெளியே சென்ற உண்ணாமலை பின்னர் வீடு திரும்பவில்லை என தெரிகிறது.

 

இதனால் உண்ணாமலையின் இரண்டாவது மகன் மூன்றாம் வகுப்பு படிக்கும் முன் தனிஷ் குடியாத்தம் நகர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து அழுது கொண்டிருந்தான். சிறுவனை அழைத்த போலீசார் விசாரணை நடத்திய பொழுது தாய் வீட்டை விட்டு வெளியே சென்ற தெரிய வந்தது.

 

சிறுவனை அவரது பாட்டியிடம் ஒப்படைத்த போலீசார் இனிமேல் வீட்டை விட்டு வெளியே வரும் பொழுது பாட்டியுடன் தான் வரவேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர். தாயை கண்டுபிடித்து தருவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon