மணல் கடத்தும் லாரிகளில் லஞ்சம் பெறும் போலீசார்.. புகார் அளித்த மக்கள்..!
கரூரில் மணல் கடத்தும் லாரிகளை நிறுத்தி போலீசார் லஞ்சம் பெற்று வசூல் வேட்டையில் ஈடுபடுவது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள வேலாயுதம் பாளையம், தவிட்டு பாளையம், குளித்தலை உள்ளிட்ட கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு வருகிறது.
கோவைக்கு லாரிகள் மூலம் மணல் கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகாரளித்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை – சேலம் தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பகுதியான மன்மங்கலம் கிராமத்தில் அதிகாலை 3 மணியளவில் மணல் கடத்தும் லாரிகளை நிறுத்தி போலீசார் லஞ்சம் பெற்று வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில் மக்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





