ஸ்பீடாக வந்த பஸ்ஸுக்குள் நேருக்கு நேர் சென்று மோதிய ஆட்டோ..!
கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கோழிக்கோட்டிற்கு அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த பொழுது எதிர்திசையில் வந்த ஆட்டோ ஒன்று திடீரென வலது புறமாக செல்ல முயன்றதால் ஆட்டோ மீது பேருந்து மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டி சென்ற அஷ்ரப் மற்றும் அவரது மகள் கீதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகின. அஷ்ரபின் மனைவி பாத்திமா அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





