ஒரே கிராமத்தில் 72 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம்..!

சூரில் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ,மயக்கத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி நான்காவது வார்டுக்கு உட்பட்ட சின்ன எலசெகிரி பகுதியில் நேற்று முன்தினம் நேற்று 56 பேர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.

 

இவர்கள் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் குடிநீரால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் மூன்றாவது நாளான இன்று 16 பேர் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.

 

இவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. அது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.