--- --:--:-- --

மருமகளின் கொடூர சதி.. மாமனாருக்கு நேர்ந்த சோகம்..!

6

மகாராஷ்டிராவின் 300 கோடி ரூபாய் சொத்திற்கு ஆசைப்பட்டு கூலிப்படையை ஏவி மருமகளே கார் ஏற்றி மாமனாரை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

மகாராஷ்டிராவின் நாக்பூரில் கார் விபத்தில் 82 வயதான புருஷோத்தமன் என்ற முதியவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

300 கோடி ரூபாய் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரது மருமகள் அர்ச்சனா ஒரு கோடி ரூபாய் கொடுத்து கூலிப்படையை ஏவி அவரை தீர்த்து கட்டியது தெரியவந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவி சகுந்தலாவை பார்த்து விட்டு திரும்பிய பொழுது புருஷோத்தமனை அவர்கள் கார் ஏற்றி கொலை செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon