திருச்செந்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. செய்தி கேட்டு அதிர்ந்து போன பக்தர்கள்..!
திருச்செந்தூர் தனியார் விடுதியில் கணவன் மனைவி, விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த பாகேஸ்வரன் – வசந்த லட்சுமி தம்பதி திருச்செந்தூர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளனர்.
கடந்த ஆறாம் தேதி திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர். நேற்று கணவனும் மனைவியும் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ரூமுக்கு வந்துள்ளனர்.
இன்று காலை வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதி பணியாளர்கள் கதவை உடைத்து பார்த்த பொழுது கணவன் மனைவி இருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாகேஸ்வரன் பஞ்சு ஏற்றுமதி செய்து வந்ததாகவும் தொழிலில் கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் மனைவியுடன் சேர்ந்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





