அம்மா உணவகத்தில் மாவு அரைக்கும் இயந்திரத்தில் பழுது..!
மதுரை மேலூர் அம்மா உணவகத்தில் இட்லி தயாரித்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 600 இட்லிகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இங்குள்ள கிரைண்டரில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக மாவரைக்க முடியாமல் போனதால் கடந்த நான்கு நாட்களாக காலையில் தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவகத்தை நம்பியுள்ள வயதானவர்கள் நோயாளிகள் இதனால் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பாக அம்மா உணவக ஊழியர்களிடம் கேட்ட பொழுது கிரைண்டரை சரி செய்து இட்லி வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





