--- --:--:-- --

காணாமல் போன கர்ப்பிணிப் பெண்.. நிர்வாண நிலையில் சடலமாக மீட்பு..!

6

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த 6ம் தேதி காணாமல் போன கர்ப்பிணி பெண் கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் சாக்கடையில் கிடந்து மீட்கப்பட்டார்.

 

மதுரை மங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி தேவி திருமங்கலத்தில் வசிக்கும் பாலாஜி என்பவரின் வீட்டில் பூ எம்பிராய்டிங் வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வெளியே சென்ற தேவி வீடு திரும்பாததால் முருகன் சுங்குவார் சித்திரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

 

இந்நிலையில் இன்று திருமங்கலம் பகுதியில் கழிவுநீர் தேங்கியதால் அந்த பகுதி மக்கள் கால்வாய் அடைப்பை சரி செய்த பொழுது சடலம் இருப்பது தெரிய வந்த நிலையில் போலீசருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கால்வாய் ஸ்லாப் கடைக்குள் சிக்கிக் கொண்டிருந்த தேவியின் சடலத்தை மீட்ட போலீசார் தேவியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon