42 வயதில் தனது மறுமணம் பற்றி பேசியுள்ள பிரபல நடிகை..!

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக, பவர் ஸ்டாராக வலம் வருபவர் தான் பவன் கல்யாண். இவர் பத்ரி படத்தில் நடித்தபோது ரேணு தேசாயுடன் காதல் ஏற்பட திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு திருமணத்திற்கு முன் அகிரா நந்தன் என்ற மகன் இருந்தான், திருமணத்திற்குப் பிறகு ஆத்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் பிரிந்தனர். கிட்டத்தட்ட 12 வருடங்களாக தனிமையில் இருந்த ரேணு தேசாய் தனது மகன் மற்றும் மகளின் வளர்ப்பை கவனித்து வந்தார். இந்த நிலையில் ரேணு தேசாய் தனது மறுமணம் குறித்து பேசியுள்ளார்.

 

அண்மையில் டைகர் நாகேஸ்வரராவ் படத்தில் நடித்த அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார், சமூக வலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

 

மறுமணம் குறித்து பேசும்போது, மறுமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும், கண்டிப்பாக இரண்டாவது திருமணம் செய்துகொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இன்னும் 2 அல்லது 3 வருடங்களில் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார்.