காலில் காயம்.. வலி தாங்க முடியாமல் காபி தோட்டத்தில் சுற்றி திரியும் சிறுத்தை..!
கூடலூர் அருகே காலில் காயத்துடன் சுற்றும் சிறுத்தைக்கு கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்க வனத்துறையினர் தேடி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் காபி தோட்டத்தில் சிறுத்தை ஒன்று காலில் காயத்துடன் உலா வந்துள்ளது.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது சிறுத்தை காலில் பலத்த காயத்துடன் நடமாட முடியாமல் காபி மற்றும் தேயிலைத் தோட்டத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
இதனால் சிறப்பு பயிற்சி பெற்ற வன ஊழியர்கள் முதுமலை புலிகள் காப்பக மருத்துவர் ராஜேஷ் தலைமையில் காபி மற்றும் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தையை தேடி வருகின்றனர். தானியங்கி கேமரா மற்றும் கூண்டு அமைத்து சிறுத்தையை பிடித்து சிகிச்சை அளிக்கவும் வனத்துறை ஏற்பாடு செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





