ஆர்எஸ் மங்கலம் அருகே 2வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் திருவிழா கோலாகலம்..!
ஆர்எஸ் மங்கலம் அருகே இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் பூக்கள் இறங்கி வழிபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தமங்கலம் மாடக்கோட்டை ஸ்ரீ முனீஸ்வரர் கோயில் வைகாசி விழாவை முன்னிட்டு, பூக்குழி விழா விழா நடைபெற்றது.
முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள், சாத்தமங்கலம் விநாயகர் கோவிலில் இருந்து, காவடி எடுத்தும், அலகு குத்தியும், பறவை காவடி, வேல் காவடி, மயில் காவடி பால்குடம் எடுத்தும், ஊர்வலமாக சென்று கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூ குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்திருந்த பால்குடத்தில் இருந்த பாலால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு நடைபெற்ற தீப ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இக்கோயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விழா நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. விழா ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சி கணக்கு குழு தலைவரும், விழா குழு தலைவருமான தனசேகரன் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




