போதை ஊசியால் பறிபோன உயிர்.. நண்பர் உட்பட 2 பேர் கைது..!
சென்னையில் போதை ஊசி செலுத்திக்கொண்ட 17 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் அவரது நண்பர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமீர் என்பவரின் 17 வயது மகன் போதை கடுமையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அந்த சிறுவன் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சிறுவனுக்கு போதே ஊசியை வாங்கி கொடுத்ததாக அவரது நண்பன் காசிப் என்பவனையும் போதை ஊசியை விற்பனை செய்த குறுக்குப்பேட்டையை சேர்ந்த செல்வி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





