பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்.. 20 அடிக்கு உள்வாங்கியதால் பரபரப்பு..!
விழுப்புரத்தில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் 20 அடிக்கு உள்வாங்கியதால் அந்த பகுதியினர் அச்சமடைந்தனர். விழுப்புரத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது.
இந்த நிலையில் சுமார் 20 அடி நீளத்திற்கு பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளம் உருவானதால் அந்த பகுதியினர் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தகவலறிந்து வந்த தமிழ்ச்செல்வி ஜேசிபி எந்திரம் கொண்டு சிமெண்ட் கலவை கலந்து கற்களை கொண்டு பள்ளத்தையும் நடவடிக்கை மேற்கொண்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





