சுசில் மோடி மறைவு..குடியரசுத் தலைவர் பிரதமர் இரங்கல்..!
பாரதிய ஜனதா கட்சியின் மூன்று தலைவர்களில் ஒருவரும் பீகார் மாநிலம் முன்னாள் துணை முதலமைச்சர் சுசில் மோடி காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுசில் மோடி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார்.
சுசில் குமார் மோடியின் இறுதி சடங்குகள் பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய சிஷில் குமார் மோடி உடல் நலக்குறைவு காரணமாக மக்களவை தேர்தல் பரப்பரையில் ஈடுபடவில்லை.
2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் பீகார் துணை முதலமைச்சர் ஆக பணியாற்றிய சுசில் மோடி மக்களவை மாநிலங்களவை உறுப்பினராகவும் செயலாற்றிய பெருமைக்குரியவர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





