மே 15ல் தொடங்கியிருந்த அண்ணா பல்கலைக்கழகப் பருவ தேர்வுகள் ஒத்திவைப்பு..!
அண்ணா பொறியியல் கல்லூரி மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் வரும் 15ஆம் தேதி தொடங்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு மையங்களில் வைக்கப்பட்டு இருக்கின்றன.
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருப்பதால் அங்கு ஆசிரியர்கள் மாணவர்கள் செல்வதில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
இதனால் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் வரும் 15ஆம் தேதி தொடங்கியிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அதன்படி ஜூன் 6-ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





