தந்தையால் கொலை செய்யப்பட்ட மாணவி 90 சதவீதம் மதிப்பெண்..!
கேரளாவில் தந்தையால் கொல்லப்பட்ட மாணவி பத்தாம் வகுப்பு தேர்வில் 90 சதவீதம் மதிப்பெண்களை எடுத்து சாதித்துள்ளார். கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவி கோபிகா. இவருக்கு ஒரு சகோதரி உண்டு. கடந்த கொரோனா காலத்தில் தாய் இறந்துவிட்டார்.
இதனால் தந்தை பராமரிப்பில் சகோதரிகள் இருந்தனர். மனைவி இறந்ததிலிருந்து தனது இரு மகள்களையும் வளர்க்க சுமேஷ் கஷ்டப்பட்டு வந்துள்ளார். அதனால் மன வேதனை அடைந்த சுமேஷ் கோபிகா எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய அடுத்த நாள் சகோதரிகள் இருவருக்கும் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு ரயிலின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இந்த நிலையில் கேரளாவில் நேற்று 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இதில் கோபிகா 90 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து தேர்வாகியுள்ளார். இதனால் அவர் படித்த பள்ளி ஆசிரியைகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





