குடும்பத்தோடு சேர்த்து வைக்ககோரி பிரபல சாமியாரிடம் சென்ற பெண்..அதிர்ச்சி தகவல்..!
பங்குச்சந்தையில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக ஆசை வார்த்தை கூறி சாமியார் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் புகார் அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவர் மற்றும் மகனை பிரிந்து டெய்லராக திருப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் பல்லடம் அருகே பணிக்கம்பட்டியில் உள்ள அர்ஜுன் கிருஷ்ணன் என்று சாமியாரின் வீடியோக்களை யூடியூபில் பார்த்த அந்த பெண் மாந்த்ரீக பூஜை மூலம் குடும்பத்தாரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு அவரை அனுப்பியுள்ளார்.
அப்பொழுது பரிகாரங்கள் செய்ய ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்ட நிலையில் கடன் வாங்கி அதனை கொடுத்ததாகவும் ஆனால் பணத்தை கொடுக்காமல் பரிகாரங்களையும் செய்யாமல் ஏமாற்றியதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் தனியாக வரவழைத்து தன்னிடம் அத்துமீறியதாகவும் அந்த புகாரில் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





