--- --:--:-- --

3 நாள் சித்திரவதை.. கணவனை சங்கிலியால் கட்டி போட்ட மனைவி..!

8

தெலுங்கானாவில் சொத்துக்காக கணவனை சங்கிலியால் அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாக மனைவியை போலீசார் கைது செய்தனர். கணவர் பெயரில் ஆன வீட்டு மனைகளை தருமாறு மனைவி கூறியதால் ஏற்பட்ட தகராறில் அந்த நபர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

 

இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்தவரை உறவினர்களுடன் சேர்ந்து கண்டுபிடித்து அவரது மனைவி தாக்குதல் நடத்தியுள்ளார். இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் அந்த நபரை மீட்டு அவரது மனைவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon