--- --:--:-- --

இன்று தமிழகம் வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

1

பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார்.

 

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19 ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தமிழகம் வர இருக்கிறார்.

 

இதற்காக, டெல்லியில் இருந்து இன்று காலை பெங்களூரு செல்லும் நிர்மலா சீதாராமன் அங்கிருந்து ஹெலிகாப்டரில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூருக்கு வருகை தருகிறார். அங்கு பாஜக வேட்பாளர் நரசிம்மனுக்கும், பிற்பகலில் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் கார்த்தியாயினுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

 

மாலையில் தஞ்சையில் நடைபெறவுள்ள ரோடு ஷோவில் பங்கேற்று, அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் முருகானந்தத்திற்கு வாக்கு சேகரிக்க இருக்கிறார். பின்னர், புதன்கிழமை நீலகிரியில் எல்.முருகனுக்காக பரப்புரை செய்யும் நிர்மலா சீதாராமன், அன்றைய தினம் கோவையில் நடைபெறும் ரோடு ஷோவில் 10 ஆயிரம் பெண்களுடன் சென்று அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். மேலும், பொள்ளாச்சியில் பாஜக வேட்பாளர் வசந்தராஜனுக்கு ஆதரவாக நிர்மலா சீதாராமன் பிரசாரம் மேற்கொள்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon