--- --:--:-- --

சிறுவனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த இளைஞர்.. கஞ்சா போதையில் நடந்த வெறிச்செயல்..!

10

நெல்லையில் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் நொச்சிகுளம் பகுதியை சேர்ந்த அன்பு என்பவர் கலையரங்கம் அருகே படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

 

காலை வேளையில் அன்பு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து அங்கிருந்தவர்கள் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போது போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பொழுது கொலையாளியை கைது செய்ய கோரி உடலை எடுக்க விடாமல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon