--- --:--:-- --

சரியாக ஆங்கிலம் பேசாத மாணவி.. ஆசிரியர் திட்டியதால் தற்கொலை..!

9

புதுச்சேரியில் ஆசிரியர் திட்டியதாக கூறி கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

புதுச்சேரி சொக்கநாதர் பேட்டையை சேர்ந்த ரமேஷ் – தேவி தம்பதியினரின் மகள் கிருஷ்ண சூர்யா. இவர் புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவிக்கு ஆங்கிலம் பேச வரவில்லை என் ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது.

 

இதனால் மன உளைச்சல் அடைந்த மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இதனிடையே மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்லூரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon