பாஜக வாகனம் டெல்லி சென்று விடும்..ஆனால் திமுக வாகனம் பஞ்சராகும்..!
மக்களவைத் தேர்தலில் பாஜக வாகனம் டெல்லி நோக்கி செல்லும் என்றும் திமுகவின் வாகனம் பஞ்சராகும் என்றும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்திருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கரூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார். அப்பொழுது பேசியவர் டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதற்கான தேர்தல் இது என கூறினார்.
பாஜக வேட்பாளர் அமர்ந்திருக்கும் வாகனம் நிச்சயம் டெல்லி சென்றடையும் என்றும், திமுகவின் வாகனம் நடுவழியில் பஞ்சர் ஆகி ஸ்டெப்னி மாற்றும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





