--- --:--:-- --

ஆவணம் இன்றி சிக்கிய 25 சவரன் தங்க நகை மற்றும் பணம் பறிமுதல்..!

7

சேலம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 25 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 650 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அத்தனூர் பட்டி பகுதியில் சேர்ந்த முருகன் என்பவர் இருசக்கர வாகனத்தில் 25 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 650 ரூபாயை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றது தெரிய வந்தது.

 

அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாழப்பாடி வட்டாட்சியர் ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon