--- --:--:-- --

ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!

3

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் 29 வது கூட்டம் ஏப்ரல் 4ம் தேதி கூடுகிறது. கூட்டத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளுக்கு ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

 

கடந்த மார்ச் 21ஆம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பிப்ரவரி, மார்ச், மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு 2.8 டிஎம்சி வீதம் நீர் வழங்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பெங்களூரில் குடிநீர் தேவைக்காக காவேரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வேண்டும் என கர்நாடகா கோரிக்கை வைத்துள்ளது.

 

கர்நாடகாவில் இந்த கோரிக்கைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இந்த கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் பற்றியும் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon