5 சவரன் நகைக்காக சொந்த அத்தையை கழுத்து அறுத்து கொலை செய்த நபர்..!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே சொந்த அத்தையை கத்தியால் குத்தி கொலை செய்த 5 சவரன் தாலி செயினை கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர். கனகவல்லிபுரம் கிராமத்தை சேர்ந்த குமாரின் மனைவி சரஸ்வதி.
வீட்டில் சடலமாக கிடந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். புகார் அளிக்கப்பட்ட 6 மணி நேரத்தில் அவரது சகோதரி மகன் அசோக் என்பவனை கைது செய்தனர் பணம் கேட்டு தராததால் சரஸ்வதியை கொலை செய்ததாக அசோக் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





