ஓடும் பேருந்தில் இறங்க முயன்று கீழே தவறி விழுந்த கல்லூரி மாணவன்.. தலையில் ஏறி இறங்கிய டயர்..!
புதுச்சேரியில் ஓடும் பேருந்தில் இருந்து தவறு விழுந்த கல்லூரி மாணவர் ஒருவர் பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். புதுச்சேரி தலைநகரை சேர்ந்த 19 வயது இளைஞர் அபிஷேக் என்பவர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கல்லூரி முடித்து தனியார் பேருந்து மூலம் வீடு திரும்பிய மாணவர் பேருந்து ஓடிக் கொண்டிருக்கும் பொழுது இடையில் இறங்க முயன்று விபத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது. விபத்தின் சிசிடிவி காட்சி பரவி வரும் நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





