ரூ.108 கோடி மதிப்புள்ள போதை பொருள் இலங்கைக்கு கடத்த முயற்சி..!
இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் எடுத்து செல்லப்பட்ட 108 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 99 கிலோ பழுப்பு நிற போதை பொருளை ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
ரகசிய தகவலின் பேரில் மன்னார்குளைகுடாவில் படகை ஆய்வு செய்த புலனாய்வு குழுவினர் ஐந்து சாக்கு முட்டைகளில் வைக்கப்பட்டிருந்த போதை பொருளை கைப்பற்றியதாக தெரிவித்தனர்.
படகிலிருந்த மூன்று பேரை கைது செய்து நடத்திய விசாரணையில் கரையில் இருந்த ஒருவர் போதை பொருட்களை கொடுத்து நடுக்கடலில் மற்றொரு படகிற்கு மாற்றிச் சென்றதாக தெரிவித்தனர். கைது செய்து புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





