2029 ல் பரந்தூர் விமான நிலையம் திறப்பு..!
பரந்தூர் விமான நிலையத்தின் பணிகள் முடிக்கப்பட்டு 2029 ஆம் ஆண்டு திறக்கப்படும் என சாத்திய கூறு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்த தொழில்நுட்ப சாத்திய கூறு அறிக்கையின்படி பரந்தூர் விமான நிலையம் நான்கு கட்டங்களாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்த செலவு 32,704 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகள் 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டு 2029 ஆம் ஆண்டு பரந்தூர் விமான நிலையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை – பெங்களூர் விரைவு சாலை வழியாக விமான நிலையத்திற்கு இணைப்பு சாலைகள் அமைக்கவும் சரக்கு முனையத்திற்கு புதிய இணைப்பு சாலைகளும் திட்டமிடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சேவை பரந்தூர் விமான நிலையம் வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





