--- --:--:-- --

மோதலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள்.. விலக்கி விட சென்ற பெண் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்..!

3

காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய திமுக நிர்வாகிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை இளைய தெருவில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் திமுக நிர்வாகிகள் அருண், முத்தமிழ் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

அப்பொழுது அருளுடன் சேர்ந்து அவரது நண்பரான திமுக மீனவர் அணி துணை அமைப்பாளர் ரமேஷும் தாக்கியுள்ளனர். அங்கு பணியில் இருந்த புது வண்ணாரப்பேட்டையின் பெண் காவல் உதவி ஆய்வாளர் திமுக நிர்வாகிகள் இடையேயான மோதலை தாக்க முற்பட்டுள்ளார்.

 

அப்பொழுது திமுக நிர்வாகிகள் உதவியாளரை தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்ட முயன்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள திமுக நிர்வாகிகள் இருவரை தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon