மூடப்பட்ட ரயில் கேட்..போராட்டத்தில் குதித்த வாகன ஓட்டிகள்..!
மறைமலை நகரில் அருகே ரயில்வே கேட் நீண்ட நேரம் மூடப்பட்டிருந்ததால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆம்பூர் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில் ரயில்வே கேட் உள்ளது. சிங்கப்பெருமாள் கோயில் மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால் அந்த வழியாக குறைந்த வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டன.
இதன் காரணமாக 45 நிமிடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தகவலறிந்து சென்ற காவல்துறையினர் வாகன ஓட்டிகளை சமாதானம் செய்தனர். இதனால் சிறிது நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





