இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து.. பதிவு சட்டத்தை ரத்து செய்ய அசாம் முடிவு..!
அசாமில் இஸ்லாமிய திருமணம் மற்றும் விவாகரத்து பதிவுகள் சட்டம் 1935 ரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக அந்த மாநில பாஜக அரசு கூறியுள்ளது .இது தொடர்பான அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து பதிவு சட்டம் 1935 விரைவில் ரத்து செய்யப்படும் எனவும் இந்த விவகாரங்கள் அனைத்தும் திருமண சிறப்பு சட்டத்திற்கு கொண்டுவர அரசு விரும்புவதாக தெரிவித்தார்.
அசாமில் வரும் 28ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில் அதற்குள் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. உத்ராகண்டில் அண்மையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் என உத்தராகண்ட் முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் அசாமில் தற்பொழுது பொது சிவில் சட்டத்தை நோக்கி முதல் அடி எடுத்து வைத்திருப்பது பேசு பொருளாகி மாறி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





